இரு தரப்பு மோதலில் 2பேர் காயம்: போலீசார் விசாரணை
இரு தரப்பு மோதலில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 08:57 GMT
காவல் நிலையம்
உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி மகாலட்சுமி, 45; இவர் நேற்று மாலை 5 மணியளவில் நிலத்தில் நாற்று நடவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நேபாளத்தை சேர்ந்த மூன்று பேர் வழிகேட்டுள்ளார். நிலத்தில் வழிகேட்க வந்ததால் சந்தேகமடைந்த மகாலட்சுமி மற்றும் அங்கிருந்தவர்கள், நேபாளத்துக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தபோது தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில் மகாலட்சுமி மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.