அதிமுக முதல் கட்ட பிரச்சாரம் மார்ச் 24ஆம் தேதி தொடக்கம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி அதிமுக தேர்தல் பிரச்சார பயணத்தின் முதல் கட்டம் மார்ச் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.;

Update: 2024-03-19 08:37 GMT

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பரப்புரை தேதி அறிவிப்பு. அதிமுக தேர்தல் பிரச்சார பயணத்தின் முதல் கட்டம் மார்ச் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு vvd சிக்னல் , mgr திடல் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு வாகையடி முனை திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

27 ஆம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நாகராஜா கோயில் திடல் , நாகர்கோவிலிலும் இரவு 7 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் அருகில் வீரசிகாமணி ரோடு சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி தனி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. இதே போல் விருதுநகர் , விருதுநகர், ராமநாதபுரம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முதல் கட்ட தேர்தல் பரப்புரை நடைபெற உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் உடன் அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News