பெரியார் திடலில் 27இணைகளுக்கு திருமணத்தை நடத்திய அமைச்சர்கள்
பெரியார் திடலில் 27 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கிய அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ஏ வ வேலு.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 10:39 GMT
திருமணத்தை செய்து வைத்த அமைச்சர்கள்
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிக் கழகத்தின் சார்பில் இன்று (12.06.2024), சென்னை, வெப்பேரி, பெரியார் திடலில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் 27 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா ராஜன் , சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.