காவிரி தீர்மானம் முழுமையானதாக இல்லை - வானதி சீனிவாசன்
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்.9) தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பின்னர் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது :
தங்கள் இயலாமையை மறைக்க இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு மாநில உரிமையில் தலையிட கூடாது என்று கூறிவிட்டு , மத்திய அரசு தலையிட்டு கர்நாடகாவிடமிருந்து நீரை பெற வேண்டும் என திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறது. டெல்டா விவசாயிகளின் நலனுக்காக , காவிரி உரிமைக்காக எப்போதும் துணை நிற்போம்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது இதைபோன்ற எந்த சிக்கலும் ஏற்படவில்லை. திமுக - காங் கட்சிகள் ஒரு கூட்டணியில் இருந்தாலும் காவிரியில் உரிய நீரை பெற முடியவில்லை. பாஜக ஒரு தேசிய கட்சி , அந்தந்த மாநிலங்களில் மாநில உரிமைக்காக பாஜகவினர் குரல் கொடுப்பது இயல்புதான்.
ஆனால் கூட்டணியில் இருந்தும் மற்றொரு அரசுடன் இவர்களால் பேச முடியவில்லை.