ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நோட்டு வழங்கும் விழா
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-26 09:01 GMT
நோட்டு வழங்கும் விழா
மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் ஷீலா ராஜேந்திரன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி துணை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.