சுத்தமலை சாலை படுமோசம்

சுத்தமலை சாலை படுமோசமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.;

Update: 2023-11-26 09:08 GMT

பழுதடைந்த சாலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டிலிருந்து சுத்தமலை மற்றும் ஆற்கவாடிக்குச் செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து படுமோசமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சாலை சேறும் சகதியுமாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலை பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இச்சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News