ராஜா கோட்டையான செஞ்சி கோட்டையை 10 -நாள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் !!! தொல்லியல் துறை அறிவிப்பு...

Update: 2024-05-13 04:58 GMT

செஞ்சி கோட்டை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி ஆலய ரத உற்சவ விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ராஜகோட்டையை 10 நாட்கள் இலவசமாக சுற்றி பார்க்க தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள செஞ்சிக்கோட்டை பல்வேறு ஊர்கள் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமா இருந்து வருகிறது.

செஞ்சிக்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டதட்ட 1092 படிகளில் ஏறி செல்ல வேண்டும் மிகவும் உயரமான இந்த இடத்திலிருந்து இயற்கையான அழகை ரசிப்பதற்காகவே பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் செஞ்சி கோட்டை நோக்கி வருகின்றனர்.

செஞ்சி கோட்டையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆலய ரத உற்சவ விழா நடைபெற உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த திருவிழாவினை சிறப்பிக்கும் வகையில் செஞ்சி ராஜா கோட்டைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்களுக்கு இலவச அனுமதி என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

அதாவது, வருகின்ற மே 13ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விழுப்புரம் செஞ்சி ராஜா கோட்டைக்கு இலவசமாக சுற்றுலா பயணிகள் சென்று ரசிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News