மயிலாடுதுறை அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்கம்பிகள் மோசடி:

மயிலாடுதுறை அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்கம்பிகள் மோசடியில் ஈடுபட்ட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-06 15:46 GMT

மின் கம்பிகள்

மயிலாடுதுறை பேச்சாவடியில் இயங்கி வரும்  மின்வாரியத்திற்கு தேவையான மின் தளவாட பொருட்களை நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய பண்டகசாலையில் பெற்று வரும்படி, மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பண்டக சாலையின் மேற்பார்வையாளராகப்     பணிபுரியும்    ஞானசுந்தரம் என்பவரை அரசு வாகனம்    அதன் ஓட்டுநர் மணிவண்ணன் என்பவரோடு அனுப்பி வைத்திருந்தார்.

  ஞானசுந்தரம் 13.12.23 ந்தேதி சென்று மயிலாடுதுறை மின்வாரிய   அலுவலகத்திற்கு வேண்டிய தளவாட சாமான்களை அன்று நாகப்பட்டினம் மத்திய பண்டகசாலையில்   ஏற்றிச்சென்றார். 

நாகை  மத்திய பண்டக சாலையில் பணிபுரியும் பண்டக காப்பாளர் இளங்கோவனிடம்  சுமார் 9.239 கி.மீ நீளம் கொண்ட அலுமினிய மின்கம்பிகளை ஞானசுந்தரம், முறைகேடாக வாங்கி தனியார் வாகனத்தில் வெளியூருக்கு அனுப்பிவிட்டார்.   அதன் பிறகு  மின்வாரிய உயர் அதிகாரிகள் அவர்களது கணினி மூலம் கணக்கெடுத்த போது ரூ.10 லட்சம் மதிப்பிலான அலுமினிய பொருட்கள் நாகை பண்டக சாலையில் குறைந்துள்ளது தெரியவந்தது. 

இது சம்பந்தமாக  மயிலாடுதுறையில் பணியாற்றிவரும்  ஞானசுந்தரத்தையும் நாகப்பட்டினம் மத்திய பண்டக சாலையில் பணிபுரியும் பண்டக அலுவலர்  சௌந்தராஜன் மற்றும் பண்டக காப்பாளர்   இளங்கோவன் ஆகியோர்களை உயர் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை  செய்து  துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து  மூன்று பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.

தற்காலிகப் பணி நீக்கத்தால் பயந்துபோனவர்கள் மோசடி செய்த  பொருட்களை எப்படியாவது சேர்த்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து  கடந்த 20.12.23 ந்தேதி காலை சுமார் 06.30 மணியளவில் மயிலாடுதுறை   பேச்சாவடி  மின்வாரிய அலுவலக வாசலுக்கு எதிரில் உளள சாலையின் ஓரத்தில் ஏழு பழைய அலுமினிய கம்பி காயில்களை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.        

அந்த ஏழு அலுமினிய கம்பி காயில்களையும் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில்    நாகப்படிணம் மத்திய பண்டகசாலையில் முறையின்றி பெற்று சென்ற அந்த மின்கம்பிகளின் மதிப்பு சுமார் 10.00,000ரூபாய்    ஞானசுந்தரம், சௌந்தர்ராஜன், இளங்கோவன் ஆகியோர்  அரசு பொது ஊழியராக இருந்தும்  நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. 

இதற்கிடையே அவர்கள் தலைமறைவாகிவுட்டனர்.  மயிலாடுதுறைபோலீசார்  3நபர்களையும்  தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News