வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் முகாம்
வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
Update: 2024-06-15 13:28 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே கொத்தூர் வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக மகராஜகடை வனப்பகுதியில் முகாம்பட்டிருந்த 10 காட்டு யானைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி கே கொத்தூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கூட்டத்தில் இருந்து பிறந்த மூன்று காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்கும் மீதமுள்ள 7 யானைகள் ஆந்திரா மாநிலப் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வனப்பகுதியில் தற்போது மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு இப்பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் காட்டு யானைகள் வேறு வனப்பகுதி விரட்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இந்த காட்டு யானைகளை வேறு வனபகுதிக்கு விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினை ஏற்பட்டு வருகின்றனர்.