சென்னையில் மாற்றுக்கட்சியினர் 100pபேர் அதிமுகவில் இணைவு
திமுக உள்ளிட்ட கட்சிகளை சார்ந்தவர்களும், ஓ பன்னீர்செல்வம் அணியை சார்ந்தவர்களும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் ஏற்பாட்டில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜி சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கேபிள் எம் ஆர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் அவர்களிடம் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு ஆள் உயர வேல் ஒன்றை பரிசாக கொடுத்தனர். இதேபோல் திமுகவை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதேபோல் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடர்வதையே வேலையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
எத்தனை வழக்கு போட்டாலும் எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்தார். போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கு உடன் தமிழக முதலமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை அவர்கள் விளக்கம் அளிக்காமல் இருப்பதாகவும், அந்த விளக்கெண்ணைகளுக்கு விளக்கம் அளிக்க தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.
மடியில் கனம் இருப்பதால்தான் அவர்களுக்கு கனம் தெரிகிறது என்றார்.