100% தேர்ச்சி - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அசத்திய அரசு பள்ளிகள்!!!

Update: 2024-05-10 06:21 GMT

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் 4105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருக்கின்றன. 1364 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அசத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி நிறைவடைந்தது. 4107 மையங்களில்  9,08,000 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தனர் தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது.

பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்தது. இதனை அடுத்து ஏற்கனவே அறிவித்த பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 99.55 சதவீதம் ஆக உள்ளது.

கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4, 22, 591 மாணவிகளுக்கும் 3, 96 ஆயிரத்து 152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 12.625 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதியுள்ளனர். இவற்றில் 7491 மேல்நிலைப் பள்ளிகளும் 5134 உயர்நிலைப் பள்ளிகளும் அடங்கும் இதில் 415 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன 1364 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.

பள்ளி வாரியாக தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும் பொழுது அரசு பள்ளிகள் 87.90 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளியில் 91.77 சதவீதம் தேர்ச்சியையும், தனியார் 9,08,000பள்ளிகள் 97.43 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது.

இதே போல் இருபாலர் பள்ளியில் 91.93 சதவீத தேர்ச்சியும், பெண்கள் பள்ளியில் 93.80 சதவீதம் தேர்ச்சியும், ஆண்கள் பள்ளியில் 83.17 சதவீத தேர்ச்சியும், பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடமாக அரியலூர் 97. 37 % தேர்ச்சி பெற்றுள்ளது. இரண்டாவது இடமாக சிவகங்கை 97. ௦2  % தேர்ச்சி பெற்றுள்ளது.

முன்றாவது இடமாக ராமநாதபுரம் 96.36 % நான்காவது இடமாக கன்னியாகுமரி 96.20% தேர்ச்சி பெற்றுள்ளது ஐந்தாவது இடமாக திருச்சி 95.20 % தேர்ச்சி பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவிகளுக்கு ஜூலை 2 முதல் துணை தேர்வு துணை தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தை திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடிகளத்தை முழுமையாக அமைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.


Tags:    

Similar News