100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு!

தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-29 10:00 GMT

விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் வருவாய்த்துறை சார்பில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெமிலி தாசில்தார் பாலசந்தர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நான் நிச்சயம் வாக்களிப்பேன், 100 சதவீதம் வாக்களிப்போம், நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பது நம் கடமை என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகத்துடன் மகளிர் குழுவினர் வண்ணக் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகள் ஆகியோருக்கு வழங்கினர்.இதில் வருவாய்த் துறை அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News