தமிழகத்தில் ரூ.1000 கோடியில் உட்கட்டமைப்பு வசதி - அமைச்சர்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1000 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Update: 2024-03-10 03:58 GMT

 விருதுநகர் சுப்பையா நாடார் அரசுப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலம் ரூ.2 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய 10 வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ரூ. 2 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தக்கட்டிங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தும் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல்லும் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1000 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேரிடர்கள் வந்தபோதும் மூலதன செலவுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வருவதாகவும் பேசினார்.தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர்,விருதுநகர் என்றாலே குடிநீர் பஞ்சம் என்கிற நிலைமாறி தற்போது ரூ 450 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக முதலமைச்சசர் தந்துள்ளதாக பேசினார்.

Tags:    

Similar News