தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வரும் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-08 10:26 GMT

 மா.சுப்பிரமணியன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வரும் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டம் 1 கோடி பேரை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2 கோடி பேர் வரையில் பயனடைந்துள்ளனர். இதுவரை 1 கோடியே 96 லட்சத்து 77,577 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐ.நா.சபையின் பாராட்டையும் பெற்றுள்ளோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். 2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரையில் 7 பேர் மட்டுமே பலியாகி இருக்கிறார்கள். தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு விடும். எனவே பொதுமக்கள் இதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News