10 ம் வகுப்பு பாட புத்தகத்தில் பன்முக கலைஞர் !

Update: 2024-05-01 07:07 GMT

 கலைஞர் கருணாநிதி

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞரின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகங்களில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த வருடம் 9ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் கலைஞர் கருணாநிதி குறித்து சேர்க்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த வருடத்திற்கான பத்தாம் வகுப்பு பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு குறித்த பாடல் வெளியாக உள்ளது.

பன்முக கலைஞர் என்ற தலைப்பில் ஐந்து பக்கங்கள் கொண்ட பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் நடப்பாண்டிலிருந்தே சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News