தேர்தல் பணியில் 11,800 பெண் பணியாளர்கள்: ராதாகிருஷ்ணன்
சென்னையில் மொத்தம் 19,419 பேரில் 11,800 கும் மேற்பட்டோர் பெண் பணியாளர்கள் உள்ளனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி மையங்களுக்கு நந்தனம் கலை அறிவியல் கல்லூரி ஸ்டராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள்,
அந்தந்த வாக்கு சாவடி மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர். நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்க உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி அமித் ஐ ஏ எஸ், இவர் சோழிங்கநல்லூர் தொகுதியும் தனியாக கவனிப்பார்.
துர்கா மூர்த்தி சைதாப்பேட்டை பொறுப்பாளர் உள்ளிட்டோர் தான் தென் சென்னை தொகுதி பொறுப்பாளர்கள். எந்த வாக்கு சாவடியில் தேர்தல் அலுவலர்கள்யாற்ற வேண்டும், என்று இன்று காலை தெரிவிக்கப்பட்டது. 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 299 குழுக்கள் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
காவல் துறையினரும் தொடர் பாதுகாப்பில் உள்ளனர்.காலை 5:30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கும் வாக்கு பதிவு செய்ய முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் வாக்குப்பதிவு செய்ய இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தால் sakshan செயலி மூலமோ அல்லது 1950 எண்ணுக்கோ அழைத்து தெரிவித்தால் வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும். மா
லை 7 மணிக்குள் வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு சேர்க்கும் பணிகள் நிறைவடையும். சென்னையில் மொத்தம் 19,419 பேரில் 11,800 கும் மேற்பட்டோர் பெண் பணியாளர்கள் உள்ளனர் என்றார்.