கற்குவேல் அய்யனார் கோவிலில் ரூ.1.19 கோடியில் திட்ட பணிகள் துவக்கம்

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ரூ.1.19 கோடியில் திட்ட பணிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-02-12 05:59 GMT


தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ரூ.1.19 கோடியில் திட்ட பணிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.


தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே உள்ள தேரிக்குடியிருப்பில் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட கற்குவேல் அய்யனார் கோவிலில் ரூ.80 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவர், ரூ.11 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் சுகாதார வசதிகள், ரூ.27 லட்சம் மதிப்பில் கோவில் அலுவலகம் கட்டும் பணிகள் உட்பட ரூ.1 கோடியே 19 லட்சத்திற்கான தொடக்க விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. 

இந்து சமய அறநிலையத்துறை இணை இணையர் அன்புமணி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் காந்திமதி, ஆய்வர் பகவதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், அறங்காவலர்கள் குமார், முத்துக்குமார், பிரபா, முருகப்பெருமாள், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் யாகசாலை பூஜையில் பங்கேற்று திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக ஆணி இணை செயலர் உமரிசங்கர், மாவட்ட பொருளாளர் ராமநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News