நெல்லையில் ரூ.157 கோடியே 33 லட்சத்தில் நலத்திட்டங்கள் - உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1200 டெபிட் கார்டுகள் மற்றும் 9 ஆயிரம் பயனாளிகளுக்கு 157 கோடியே 33 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-10-28 04:58 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்விற்கு , தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நிதி மற்றும் மனித மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, திருநெல்வேலி மாநகராட்சி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தூய்மைப்பணி டிராக்டர், மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், மின்சார தையல் இயந்திரம், வீட்டுமனைப்பட்டாக்கள், விவசாய கடன் அட்டை, கல்வி கடன்கள், தொழில் கடன்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டிடங்கள் மற்றும் பாலங்கள், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தங்கும் அறைகள் என புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது: இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1200 டெபிட் கார்டுகள் மற்றும் 9 ஆயிரம் பயனாளிகளுக்கு 157 கோடியே 33 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Tags:    

Similar News