சென்னையில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம்!!

கனமழை எச்சரிக்கை, விடுமுறை விடப்பட்டதால் தேவை அதிகரித்து கூடுதலாக 1.5 லட்சம் லிட்டர் என மொத்தம் 16 லட்சம் லிட்டர் பால் வினியோகிக்கப்பட்டது.

Update: 2024-10-16 08:28 GMT

ஆவின் பால்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி குவித்தனர். இதனால் மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆவின் பார்லர், விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பால் வாங்கி சென்றனர். வழக்கமாக வாங்கும் அளவை விட ஒவ்வொருவரும் கூடுதலாக பால் வாங்கியதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்தன. ஆவின் பால் மட்டுமல்லாமல் தனியார் பால் பாக்கெட்டுகளுக்கும் கிராக்கி ஏற்பட்டது. சென்னையில் ஆவின் பால் தினமும் 14.5 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்படுவது வழக்கம். கனமழை எச்சரிக்கை, விடுமுறை விடப்பட்டதால் திடீர் தேவை அதிகரித்தது. இதனால் கூடுதலாக 1.5 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்படுகிறது. 2 நாட்களாக தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வினியோகிக்கப்படுகிறது. 

Tags:    

Similar News