சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் விலை !

Update: 2024-06-26 11:40 GMT

தங்கம் 

கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு 6680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விட இன்று இருபது ரூபாய் கிராமிற்கு தங்க விலை குறைந்துள்ளது. தங்க பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 26) சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News