அடுத்தடுத்து 2 மளிகை கடை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை !

அரியலூர் அருகே அடுத்தடுத்து 2 மளிகை கடையின் ஒட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் ரொக்க பணத்தை நள்ளிரவில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.;

Update: 2024-04-06 06:12 GMT

திருட்டு

அரியலூர், ஏப்.6- அரியலூர் அருகே அடுத்தடுத்து 2 மளிகை கடையின் ஒட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் ரொக்க பணத்தை நள்ளிரவில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர். அரியலூர் அருகே அடுத்தடுத்து 2 மளிகை கடையின் ஒட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் ரொக்க பணத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் கவரப்பாளையம் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் இன்று காலையில் கடையை திறந்து பார்த்தபோது, கல்லாபெட்டி திறந்து இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கல்லாவில் இருந்த ரூபாய் 13,000 ரொக்க பணம் திருட்டு போனதும், கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து கொள்ளையர்கள் வந்திருப்பதும் தெரியவந்தது.

இதேபோன்று இவரது கடையின் அருகிலுள்ள விஜயா என்பவரின் மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கு கல்லா மற்றும் உண்டியலில் இருந்த ரூபாய் 8 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆண்டிமடம் பகுதியில் அடிக்கடி இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News