+2 ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம்

12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2024-02-20 03:17 GMT

12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், அதே போல் 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் பொது தேர்வு  நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளின் ஹால் டிக்கெட்களை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுத உள்ளவர்கள், நேற்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டுத் தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News