நேருஜி நகர் மேம்பாலம் அருகே மது விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் நேருஜி நகர் மேம்பாலம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்;
Update: 2024-02-03 04:51 GMT
மது விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் நகரில் ரோந்து சென்றனர். அப்போது நேருஜிநகர் மேம்பாலம் அருகே மதுபானம் விற்ற செம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே மதுபானம் விற்ற பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வீரகாளிமுத்து (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.