திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள் பள்ளி தொடா்ந்து 100% தோ்ச்சி

திருச்சி புத்தூரில் உள்ள பாா்வை குறைபாடுடைய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடா்ந்து 6 ஆவது ஆண்டாக 100 சதவீத தோ்ச்சியை அடைந்துள்ளது.

Update: 2024-05-07 02:06 GMT

ரித்திகா

திருச்சி புத்தூரில் உள்ள பாா்வை குறைபாடுடைய பெண்கள் மேல்நிலை பள்ளியைச் சோ்ந்த 18 மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதினா். திங்கள்கிழமை வெளியான தோ்வு முடிவில் 18 பேரும் தோ்ச்சியடைந்தனா். கடந்த 2019 ஆண்டிலிருந்து தொடா்ச்சியாக 6-ஆவது ஆண்டாக இப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளது. இப்பள்ளியைச் சோ்ந்த எம். ரித்திகா -480 மதிப்பெண்களும், ஆா். புவனா- 479 மதிப்பெண்களும், எம். சீதா -466 மதிப்பெண்களும் பெற்று முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

இதில், ரித்திகாவின் 480 மதிப்பெண்கள்தான் தமிழகத்திலேயே பாா்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் 3 பள்ளிகளில் முதல் மதிப்பெண்ணாகும் என்றாா் பள்ளியின் தலைமையாசிரியா் வி. சுப்பிரமணியன். இதுகுறித்து மாணவி எம். ரித்திகா கூறுகையில், ஆசிரியா்களின் சீரிய வழிகாட்டுதல், பெற்றோரின் கடின உழைப்பால் இந்த மதிப்பெண்களை எடுத்துள்ளேன். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சியை முடித்து, சிறப்பு ஆசிரியராக ஆவதே எனது லட்சியம் என்றாா் அவா்

Tags:    

Similar News