மழைவெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2.00 லட்சம் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4.00 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என.தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Update: 2024-03-05 17:55 GMT
மழைவெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2.00 இலட்சம் வரையும் முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4.00 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இவ்வறிவிப்பிற்கிணங்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆகமொத்தம் ரூ.45.84 கோடி வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.