200 பவுன் நகை, 45லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு கஜலட்சுமி அம்மனுக்கு 45 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 பவுன் நகைளை கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

Update: 2023-10-22 05:38 GMT

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வீதியில் பழமைவாய்ந்த அறம்வளம் நாயகி சமேத கைலாதநாதர் கோவில் உள்ளது.நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்களால் கொண்டு வரப்பட்ட சுமார் 45 லட்சம் புதிய ரூபாய் நோட்டு மற்றும் 200 பவுன் நகை மூலம் தொடர்ந்து 9 மணி நேரம் அலங்காரம் செய்து கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று பகுதிகளில் உள்ள வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். இறுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.



Tags:    

Similar News