25 ஆண்டுகளாக இல்லாத அளவு சட்ட ஒழுங்கு சீர்குலைவு: ஜெயக்குமார்

கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் இப்போது எப்படி வந்தது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2024-06-01 10:55 GMT
செய்யும் தொழிலே தெய்வம் என எண்ணி உழைக்கும் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு அதிர்ச்சியளிக்கிறது. எனது சொந்த தொகுதியான இராயபுரத்திற்கு உட்பட்ட வண்ணாரபேட்டையில் சாகுல் ஹமீது என்பவரது கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இது எந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. நம் தொகுதியில் 25 ஆண்டுகளாக இல்லாத பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தற்போது வந்தது எப்படி? இச்சம்பவத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது தான் வேதனையிலும் வேதனை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News