ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கைது
ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் புதுக்குடி கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ரமணா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது குழந்தை தேவையா என நினைத்த ரமணா, கருகலைப்பு மாத்திரை வாங்கி தின்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிர் இழந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டதில், தா.பழூரில் உள்ள ஓய்வுபெற்ற அரசு மருத்துவரான தேன்மொழி மற்றும் செவிலியர் சக்திதேவி, உதவியாளர் வெற்றிசெல்வி ஆகியோர் சேர்ந்து கருகலைப்பு மாத்திரை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் இன்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்