நெய்வேலியில் என்எல்சி தொழிலாளர்கள் 300 பேர் கைது

Update: 2023-12-14 04:29 GMT

மறியல் போராட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும், பாரத பிரதமர் அறிவித்திருந்த ரோஸ் கார் மேளா திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், மாதம் 50000 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள சென்ட்ரல் விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு முன்பு மறியல் போராட்டம் செய்ய அழைப்பு விடுத்திருந்த நிலையில் பெரியார் சதுக்கத்திலிருந்து பேரணியாக செல்ல முயற்சி செய்யும்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். இதில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் நாம் தமிழர் தொழிற்சங்கம் என்எல்சி தேசிய முற்போக்கு தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற் சங்கங்களை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட என்எல்சி நிறுவன தொழிலாளர்கள் கலந்து கொண்டு கைதாகினார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
Tags:    

Similar News