ரூபாய் 35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்

தாளவாடி அருகே பஸ்ஸில் எடுத்து வந்த ரூபாய் 35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-22 11:36 GMT
தாளவாடி அருகே பஸ்ஸில் எடுத்து வந்த ரூபாய் 35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் பாராளமன்ற தேர்தல் நடைபெறு வதையொட்டி தொகுதி முழுவதும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழுவினர் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் , நீலகிரி நாடாளுமன்றத்திற்குட்பட்ட பவானிசாகர் தொகுதி, தாளவாடி தாலுக்கா அரேப்பாளையம் என்ற இடத்தில் பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையின் போது கார்நாடகவில் இருந்து கோயமுத்தூர் சென்ற பஸ்சில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், வழங்க வேண்டிய பணத்தை _ எடுத்து வந்ததாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அலுவலர் உமா சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொகையை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
Tags:    

Similar News