பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ 38 லட்சம் உண்டியல் காணிக்கை

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ 38 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Update: 2024-04-03 08:58 GMT

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ 38 லட்சம் உண்டியல் காணிக்கை சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இதை எடுத்து 27ஆம் தேதி கோவிலில் உள்ள உண்டியலை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது இந்த நிலையில் நேற்று மீண்டும் கோவிலில் உள்ள உண்டியலில் திறக்கப்பட்டு என்னும் பணி நடந்தது பண்ணாரி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மேனகா பவானி சங்கமேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சுவாமிநாதன் சத்தியமங்கலம் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் சிவமணி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எனப்பட்டது.

இந்த பணியில் கல்லூரி மாணவிகள் வங்கி அலுவலர்கள் கோவில் பணியாளர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர் இதில் உண்டியல் காணிக்கையாக 38 லட்சத்தி 49 ஆயிரத்து 570 தங்கம் 570 கிராமம் வெள்ளி 322 கிராமம் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்

Tags:    

Similar News