4 நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - நகராட்சி நிர்வாகத்துறை
தமிழகத்தில் 4 நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகத்துறை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.;
Update: 2024-06-23 07:54 GMT
தலைமை செயலகம் (பைல் படம்)
அண்மையில் புதிதாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு நகராட்சிகள் 20 நாளுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும், தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன. பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும், தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன அவை 159 ஆக உயரும் தமிழகத்தில் , 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.