சிஎஸ்கே அணி தேர்தல் பத்திரம் மூலம் அதிமுகவுக்கு 5 கோடி நிதி

தேர்தல் பத்திரம் மூலம் ஆறு கோடி ரூபாய் மேல் நிதி பெற்றுள்ளது அதிமுக, அதில் 5 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே அணி நிதி அளித்துள்ளது.

Update: 2024-03-17 15:59 GMT

கோப்பு படம் 

தேர்தல் பத்திரம் மூலம் அதிமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தேர்தல் செலவு பிரிவு செயலாளர் பினோத்குமாருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரம் மூலம் அதிமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது என்பது குறித்த விபரத்தை அனுப்பிய கடிதம் வெளியாகி உள்ளது.

அதிமுக பெற்ற மொத்த தேர்தல் நிதி 6 கோடி ரூபாயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மட்டும் 5 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளது, தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிமுகவுக்கு நிதி அளித்தபோது அதிமுகவின் பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இருந்துள்ளார். இதுதவிர லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் என்பவர் அதிமுகவுக்கு ரூ.5 லட்சத்தை தேர்தல் பத்திரம் மூலம் நிதியாக அளித்துள்ளார்.

Tags:    

Similar News