வாகன சோதனையில் 50 ஆயிரம் பறிமுதல்
தென்காசி மாவட்டம், புளியம்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூபாய் 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-18 16:55 GMT
பணம் பறிமுதல்
புளியம்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூபாய் 50 ஆயிரம் பறிமுதல் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைப் புளியம்பட்டி, டானா புதூர் சோதனை சாவடியில் இன்று பிற்பகல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்த மகேந்திரா பிக்கப் வேணை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். டெம்போவில் வந்த அருணிடம் ரூபாய் 50920 இருந்ததை கண்டறிந்தனர். அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை குழுனர் பணத்தை கைப்பற்றி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.