52 புதிய திட்டங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்
உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 05:33 GMT
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் காலை 9 மணியளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என் நேரு, தா.மோ அன்பரசன் , சேகர் பாபு , தயாநிதி மாறன் எம்பி மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.