மாட்டு வியாபாரியிடம் 5.80 லட்சம் பணம் பறிமுதல்!
வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.;
Update: 2024-03-19 18:26 GMT
பறக்கும் படையினர் பறிமுதல்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வேலூர் நோக்கி வந்த சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரூ.5,89,500/- லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. மேலும், உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து அணைக்கட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பணம் கொண்டு வந்த விஜயன்," பொய்கை பகுதியில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு மாட்டு வியாபாரம் செய்வதற்காக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்".