சர்வதேச ஆணழகன் போட்டியில் 5வது இடம் - அமைச்சர் வாழ்த்து
சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் 5வது இடம் பிடித்த தூத்துக்குடி வாலிபருக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.;
Update: 2024-06-17 05:03 GMT
சர்வதேச ஆணழகன் போட்டியில் 5வது இடம்
டெல்லியில் நடைபெற்ற ஷெரு கிளாசிக் IFBB ப்ரோ லீக் தகுதிச் சுற்று எனும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தேவசித்தம் மகன் மாரி செல்வம் என்பவர் 5வது பரிசு பெற்றார். அவர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவனை சந்தித்து போட்டியில் பங்கு பெற டெல்லி சென்று வர உதவியதற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.