தென்காசியில் 4 ஆண்டுகளில் 6 கலெக்டர்கள்

தென்காசி மாவட்டம் உருவாகி 4 ஆண்டுகளில் 6 கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட ஒரு ஆண்டு முழுமையாக பணியாற்றவில்லை.

Update: 2024-02-06 10:27 GMT
பைல் படம்

தென்காசி மாவட்டம் உருவாகி 4 ஆண்டுகளில் 6 கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட ஒரு ஆண்டு முழுமையாக பணியாற்றவில்லை. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் 2019 நவம்பரில் உருவானது. முதல் கலெக்டராக அருண் சுந்தர் தயாளன், தொடர்ந்து சமீரன், கோபாலசுந்தரராஜ், ஆகாஷ், துரை ரவிச்சந்திரன் என ஐந்து கலெக்டர்கள் பணியாற்றியுள்ளனர். 6 வது கலெக்டராக நேற்று கமல் கிஷோர் பொறுப்பேற்றார்.

இவர் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நேற்று மாலையில் கலெக்டராக பொறுப்பேற்றவர் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றார். வெளிமாநிலங்களுக்கு கனிமவளம் கடத்தப்படுவது குறித்த கேள்விக்கு இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன் விசாரிக்கிறேன் என்றார். தென்காசி மாவட்டத்தில் இதுவரை நான்கு ஆண்டுகளில் ஆறு கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒரு கலெக்டர் கூட ஒரு ஆண்டு முழுமையாக பணியாற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News