கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 72.11 செ. மீ மழை பதிவு!
அதிகபட்சமாக ஆழியார் பகுதியில் 14.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Update: 2024-05-22 06:05 GMT
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. மாநகர்,புறநகர் பகுதிகளில் மதியம் முதல் இரவு வரை சில இடங்களில் விட்டு விட்டும் சில இடங்களில் தொடர்ச்சியாகவும் மிதமானது முதல் கனமான வரை மழை பொழிந்தது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கோவை வடக்கு,தெற்கு,ஆனைமலை, பொள்ளாச்சி,சூலூர்,வால்பாறை உள்ளிட்ட 12 தாலுக்காகளிலும் சேர்த்து 72.11 செ.மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.அதிகபட்சமாக ஆனைமலை தாலுக்கா ஆழியாரில் 146 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுக்க பரவலாக மழை பெய்த அதே சமயம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தாலுக்காக்களில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.