4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 73,255 பேர் விண்ணப்பம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 73,255 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2024-05-17 16:45 GMT

கோப்பு படம்

 தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் நான்காயிரம் காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த மார்ச் 14-ஆம் தேதி வெளியிட்டது. அதில் தகுதியானவர்கள் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வெழுத தமிழகம் முழுவதும் 73,255 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தற்பொழுது விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள டி.ஆர்.பி. வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கான அவகாசம் நாளை மறுநாள் உடன் நிறைவடைகிறது. எனவே இதுவரை மேற்கொள்ளாதவர் அவற்றை (www.trb.tn.gov.in) எனும் இணையதளம் மூலமாக மே 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இது குறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News