தூத்துக்குடியில் துறைமுகத்தில் 75%பணிகள் முடங்கியது

அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-02-17 02:41 GMT


அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள 30 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுகம், ரயில், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதன் காரணாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் எதிரொலியாக வ.உ.சி., துறைமுக ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்கள் தூத்துக்குடி துறைமுகம் முன்பு மத்திய அரசு மற்றும் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6 கப்பல்கள் நிற்கிறது. இதில் 2 கண்டெய்னர் கப்பல்களில் மட்டும் பணிகள் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் 75 சதவீதம் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூ.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி மற்றும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News