குடிபோதையில் கார் ஒட்டிய 8 பேருக்கு அபராதம் - கார்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய கார் ஓட்டுனர்கள் 8 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு ரூ. 2. 80 லட்சம் அபராதம் விதித்த போலீசார், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-20 04:32 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 

அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சிமெண்ட் தொழிற்சாலைகள் இருப்பதால் கனரக மற்றும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து விதி மீறல்களும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக குடிபோதையில் கார் ஓட்டிவரும் நபர்களால் அதிகளவில் விபத்து ஏற்படுவதாக போலீசாரின் ஆய்வில் தெரிய வந்தது .

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் கார் ஓட்டிய 8 பேர் உள்ளிட்ட 13 வாகனங்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம் விதித்து கார் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். 

சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த நபர் காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு போலீசாரை ஆபாசமாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து, ஜெயங்கொண்டம் பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டிய 8 பேருக்கு அபராதம் விதித்த போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News