சேலம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
Update: 2023-12-07 02:56 GMT
டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி
சேலம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சையது சுல்தான் பாட்ஷா, கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளிக்கும், ஓசூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் அஞ்செட்டிக்கும், சேலம் மாவட்டம் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தாரமங்கலத்துக்கும், அங்கு பணியாற்றிய தொல்காப்பியன் தர்மபுரி மாவட்டம் கடத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சாவித்திரி மேட்டூருக்கும், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிக்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரஜினி சங்ககிரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பிறப்பித்துள்ளார்.