8 நாட்களில் 80,076 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை

2024-25 ஆம் கல்வியாண்டில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என்ற திட்டத்தின் படி மார்ச் 8 ஆம் தேதி வரை 80,076 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

Update: 2024-03-10 02:53 GMT

குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை, கடந்த மார்ச் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சேர்க்கை தொடங்கி வைக்கப்பட்ட பின் தொடர்ந்து, மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2024 - 2025ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் அனைவரையும் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என்ற திட்டத்தின் படி மார்ச் 8 ஆம் தேதி வரை 80,076 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். சென்னையில் மட்டும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1076 பேரும், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 165 பேரும் என மொத்தம் 1232 பேர் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10,411 பேரும் , சேலத்தில் 7890 பேரும், கிருஷ்ணகிரியில் 7770 பேரும், கன்னியாகுமரியில் 4228 பேரும் என மொத்தம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

Tags:    

Similar News