ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கூரியர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 6.3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2.7 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-24 08:05 GMT

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கு பகுதியில் தனி வட்டாட்சியர் ரெங்கசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற கூரியர் நிறுவன வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 6 கிலோ 334 கிராம் தங்கம்,2 கிலோ 769 கிராம் நகைகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் மதுரை அய்யர்பங்களா பகுதியில் செயல்படும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட தங்க நகைகளை எடுத்து செல்லும் கூரியர் நிறுவனம் மூலம் மதுரையில் இருந்து சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி பகுதிகளில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு தங்க நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். தங்க நகைகள் கொண்டு வந்த வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக உதவி தேர்தல் அலுவலர் கணேசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News