பிளஸ் 1 பொதுத் தேர்வில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2024-05-14 13:00 GMT

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணாக்கருக்கு, கடந்த மார்ச் 4 முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 7,534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8,25,187 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் தனித்தேர்வர்களாக 4,945 பேரும் சிறைவாசிகள் 187 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  இன்று காலை 9.30 மணி அளவில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 91.17% மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 87.26%, மாணவிகள் - 94.69% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதன்படி மாணவர்களை விட மாணவிகள் 7.43% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டம் 91.68% தேர்ச்சி விகிதத்துடன் 17 ஆவது இடத்தில் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் 96.02 % பெற்று முதலிடம், ஈரோடு மாவட்டம் 95.56 % பெற்று இரண்டாமிடம், திருப்பூர் 95.23% பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளது.  அரசுப் பள்ளிகளில் 85.75% அரசு உதவி பெறும் பள்ளிகள் - 92.36% தனியார் பள்ளிகள் - 98.09% தேர்ச்சி பெற்றுள்ளன.
Tags:    

Similar News