கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை - மீட்கும் பணியில் வனத்துறை

கொளப்பள்ளி அருகே வனத்துறையினர் யானை கூட்டத்தை விரட்டிய போது கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று அங்கிருந்த கிணற்றில் விழுந்தது.

Update: 2024-05-29 08:45 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும், சில சமயங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதும் அவ்வப்போது நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூர், கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் நேற்றிரவு முகாமிட்டிருந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், யானை கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். எதிர்பாராத விதமாக யானை கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று‌ 30 அடி கிணற்றிற்குள் விழுந்தது. இதையடுத்து கிணற்றில் குட்டி யானை விழுந்ததையறிந்த யானைக் கூட்டம் அங்கிருந்து நகராமல் இரவு முழுவதும் பிளிரியபடி கிணற்றை சுற்றி நின்றதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் கிணற்றில் விழுந்த குட்டி யானையை இன்று காலை ஜே.சி.பி., உதவியுடன் மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News