ஊட்டியில் காதலி இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன்!
ஊட்டியில் காதலியின் இறப்பை தாங்க முடியாததால், விஷம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.;
Update: 2024-06-01 06:15 GMT
தற்கொலை
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கப்பச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனின் பெற்றோர் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். பத்தாம் வகுப்பு முடித்துள்ள அந்த சிறுவன், ஊட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளான். சிறுவனுக்கு ஊட்டியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுவன் காதலித்து வந்த இளம்பெண் இறந்ததார். ஏற்கனவே பெற்றோரை இழந்த சிறுவன், காதலியும் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளான். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிறுவன் கடந்த 13 -ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றான். மயங்கி கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.