மாடு முட்டிய சம்பவத்தில் பெண்ணின் கணவர் புகார்
மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 15:28 GMT
எருமை மாடு
சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்திய தண்டனை பிரிவு 289, 338 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாடு உரிமையாளரை யார் என தீவிரமாக தேடி வருகின்றனர். அருகில் இருக்கும் மாட்டு மந்தை பகுதியில் இருந்து மாடு சாலையில் வெளிவந்ததா அல்லது வேறு தனி நபரின் மாடா என்கிற கோணத்தில் திருவொற்றியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.