எருது விடும் திருவிழாவில் கிணற்றில் விழுந்த காளை - பத்திரமாக மீட்ட இளைஞர்கள்
எருது விடும் திருவிழாவில் கிணற்றில் விழுந்த காளையை பெரும் சிரமத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட இளைஞர்கள்.
By : King 24x7 Angel
Update: 2024-02-13 11:26 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம் வரகூர் ஊராட்சிக்குட்பட்ட கருங்காலிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 34 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு கால்நடை துறை சார்பில் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் விழா குழுவினர் உறுதிமொழி எடுக்கப்பட்டு ஓவ்வொரு காளைகள் விடப்பட்டது. இதில் குறைந்த நிமிடத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசாக ரூபாய் 75,555,ம் இரண்டாவது பரிசாக ரூபாய் 66,666, மூன்றாவது பரிசாக ரூபாய் 50,0000 என வழங்கப்பட்டது. இந்த காளை விடும் திருவிழாவில் வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆந்திரா சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்த காளை விடும் திருவிழாவில் சீரிப்பாய்ந்த காளைகளால் இளைஞர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது. இத்திருவிழா கான காவனூர், பட்டனம், புங்கனூர், திமிரி, குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டு பார்த்து மகிழ்ந்தனர்.. காளை விடும் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரன் ஸ்ருதி தலைமையில் 180 க்கு மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக முறையான பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தினால் கண்ணமங்கலம் கீழ்வெல்லம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் காளை அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது உடனடியாக இளைஞர்கள் கயிற்றின் மேலும் பெரும் சிரமத்திற்கு பிறகு காளையை மீட்டனர் ஆனால் இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் இருந்தும் வராமல் அங்கு வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.